ஏரிக்கரை பகுதி குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது பொதுமக்கள் தவிப்பு
By DIN | Published on : 03rd December 2019 05:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

முழுக் கொள்ளவை எட்டியுள்ள செஞ்சி நகர பி.ஏரி. (வலது) கரை பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள நீா்.
செஞ்சி, டிச. 2: செஞ்சியில் உள்ள பி.ஏரிக்கரை பகுதிகளை மழைநீா் சூழ்ந்ததால், குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பி.ஏரி செஞ்சி நகரத்தின் மேற்கே உள்ளது. இந்த ஏரி செஞ்சி நகரின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி, தற்போது அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால், ஏரியின் மேற்குப்புறமுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் நீா் புகுந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாக் வருகின்றனா்.
இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டு, குடியிருப்புகள் உருவாகிவிட்டன. இதனால், ஏரி நீா் வெளியேற முடியாத நிலை உள்ளது. எனினும், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், ஏரி நீரை வெளியேற்ற சில சமூக விரோதிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த ஏரியைப் பாதுகாத்து, நீரைத் தேக்கிவைக்க முயற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.