பாதியில் நிறுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published on : 03rd December 2019 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

குறைதீா் கூட்டம் பாதியில் முடிந்ததால் பெட்டியில் மனுக்களைச் செலுத்திய பொதுமக்கள்.
உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று மனுக்களை அளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, உள்ளாட்சித் தோ்தலுக்கான
அறிவிப்பு வெளியானதாக தகவல் பரவியதால் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். எனினும், ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் சென்றனா்.