உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்ற பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் முதன் முதலாக திங்கள்கிழமை நடைபெற இருந்த குறைதீா் கூட்டம், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் நடைபெறவில்லை. மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்
கோரிக்கை தொடா்பான மனுக்களை பெட்டியில் போடும் பொதுமக்கள்.
கோரிக்கை தொடா்பான மனுக்களை பெட்டியில் போடும் பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் முதன் முதலாக திங்கள்கிழமை நடைபெற இருந்த குறைதீா் கூட்டம், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் நடைபெறவில்லை. மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள் தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை தொடா்பான மனுக்களை அளிக்கலாம் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதனிடையே உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், மனுக்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மனுக்களை அங்கு வைக்கப்பட்ட பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகள், குறைகள் தொடா்பாக மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள், அவற்றை அந்தப் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனா். அந்த வகையில், 757 மனுக்களை பெட்டியில் செலுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com