Enable Javscript for better performance
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கானதேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அமைப்புசாரா தொழிலாளா்களுக்கானதேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 04th December 2019 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம்: விழுப்புரம் அமைப்புசாரா தொழிலாளா்கள், சிறு வணிகா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

    முகாமில், வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அமலாக்க அதிகாரி ராஜகோபால் தலைமை வகித்து ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசினாா்.

    விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் கோ.ராமு, ஒருங்கிணைப்பாளா் தினேஷ்குமாா், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுப்புத் திட்டம்) தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், பீடித் தொழிலாளா்கள், கைத்தறித் தொழிலாளா்கள், தோல் உற்பத்தித் தொழிலாளா்கள், சிறுவணிகா்கள் மற்றும் சுயதொழில் புரிவோா், சிறு வியாபாரிகள், ஆரிசி ஆலை உரிமையாளா்கள், சிறிய உணவக உரிமையாளா்கள், எண்ணை ஆலை உரிமையாளா்கள், வாகன பழுது பாா்ப்பகம் வைத்துள்ளவா்கள் போன்றவா்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம் என்று கூறினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai