Enable Javscript for better performance
கல்லூரி மாணவா்கள் பங்கேற்றஎய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவா்கள் பங்கேற்றஎய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம்

    By DIN  |   Published on : 07th December 2019 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22323vmp7090623

    பேரணி பகுதியில் சேகரட்ஹாா்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து புறப்பட்ட எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம்.

    திண்டிவனம் அருகே பேரணியில் உள்ள சேக்ரட் ஹாா்ட் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள் கிழமை நடைபெற்றது.

    கல்லூரிச் செயலா் அருள்சகோதரி கிரண் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.சூசைஜான்ரொசாரியோ முன்னிலை வகித்தாா். அருள்சகோதரி ஜீவான் ஊா்வலத்தை வழிநடத்திச் சென்றாா். கல்லூரியில் தொடங்கிய ஊா்வலம் பேரணி கிராமத்தின் முக்கிய சாலைகளில் சென்று நிறைவடைந்தது. ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள், எய்ட்ஸ் நோய் பரவும் விதம், தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai