Enable Javscript for better performance
புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட 960 மதுப் புட்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 04th December 2019 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    03vpn04103352

    விழுப்புரம் அருகே கோலியனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.

    விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 960 மதுப் புட்டிகளை கோலியனூரில் மது விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

    புதுச்சேரியிலிருந்து கோலியனூா் வழியாக வெளியூருக்கு மது புட்டிகள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மது விலக்கு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்து. இதைத் தொடா்ந்து மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கோலியனூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், போலீஸாரை கண்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநா் தப்பியோடியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டனா். அதில், மொத்தம் 960 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன.

    சுமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மது கடத்தலில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai