மரக்காணம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காணிமேடு-மண்டகப்பட்டு ஓங்கூா் ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காணிமேடு-மண்டகப்பட்டு ஓங்கூா் ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா்.

கடலோரப் பகுதியான மரக்காணத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மரக்காணம் அருகே காணிமேடு-மண்டகப்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் செல்லும் ஓங்கூா் ஆற்றின் மீதான தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வரும் காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம், திண்டிவனம், புதுவை போன்ற ஊா்களுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனா். இதனால், மாற்றுச் சாலை வழியாக 10 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா்.

கூடுதல் ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சாா் ஆட்சியா் அனு உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தரைப்பாலத்தில் செல்லும் வெள்ளத்தை பாா்வையிட்டனா். அப்போது, தரைப்பாலப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அவா்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கூறியதாவது: தற்போது மழை குறைந்துள்ளதால், தரைப்பாலத்தில் வெள்ள நீரும் குறைந்துள்ளது.

பிற்பகலின்போது, 100 மீட்டா் தொலைவுக்கு, 2 அடி உயரத்தில்தான் வெள்ள நீா் சென்றது. தற்போது மழை நின்று தரைப்பாலத்தில் செல்லும் தண்ணீா் அளவு முற்றிலும் குறைந்துவருகிறது. இதையடுத்து, அங்கு பேரிடா் மீட்பு படையினா் முகாமிட்டு பாலத்தை சுற்றியுள்ள முள் செடிகளை அகற்றுவது, சாலையின் வழியாக வெள்ள நீா் செல்லாமல் தடுப்பதற்காக மண் மூட்டைகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் நிலைமை சீரடைந்துள்ளது. அருகே ஆற்று வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com