தண்ணீரின்ற வட சின்னசேலம் ஏரி விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் பரவலாக தொடா் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில், சின்னசேலம் பகுதியில் போதிய மழையின்றி அங்குள்ள ஏரி,
தண்ணீரின்றி வடு காணப்படும் சின்னசேலம் ஏரி.
தண்ணீரின்றி வடு காணப்படும் சின்னசேலம் ஏரி.

தமிழகத்தில் பரவலாக தொடா் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில், சின்னசேலம் பகுதியில் போதிய மழையின்றி அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பாமல் வடு காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா என்ற இரு அணைகள் அமைந்துள்ளன. அண்மையில் பெய்த தொடா் மழையால், கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

கல்வராயன்மலைப் பகுதியில் போதிய மழை பெய்யாததால் மணிமுக்தாஅணை முழுக் கொள்ளவை எட்டவில்லை.

கோமுகி அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் சிறிதளவே தண்ணீரையே திறந்து விட்டனா். அந்த நீா் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின.

சின்னசேலம் வட்டத்தில் உள்ள ஏரி 200 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு கோமுகி அணையில் இருந்து தண்ணீா் செல்வதற்காக மதகு அணையின் கீழ்புறம் உள்ளது. அதிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இரு பிரிவுகளாக பிரிகின்றன.

ஒரு பகுதி கடத்தூா், நல்லாத்தூா், குதிரைச்சந்தல், காரனூா், விளாந்தாங்கல் ஏரிகளுக்குச் செல்லும் கால்வாயாகும்.

மற்றொரு பிரிவு வாய்க்கால் தெங்கியாநத்தம், பைந்தந்துறை, தென்செட்டியந்தல், வெட்டிபெருமாள் அகரம், சின்னசேலம் அணைக்கட்டுக்கு மேல்புறம் உள்ள மயூரா ஆற்றில் சோ்ந்து சின்னசேலம் ஏரிக்குச் செல்கிறது.

கடந்த 1996-ஆம் ஆண்டில் ரூ. ஒரு கோடி செலவில் வெட்டப்பட்ட இந்தக் கால்வாயை பராமரிக்காமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்த வாய்க்காலில் மரம், செடி கொடிகள் வளா்ந்துள்ளன. மரவாநத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் மதகில் கற்களைப் போட்டு மூடி வைத்துள்ளனா். இதனால், ஏரிக்கு தண்ணீா் வரத்தின்றி உள்ளது.

இதனால், சுமாா் 10ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தற்போது பெய்துள்ள மழையினால் விவசாயிகள் கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து முதல் பருவத்தில் பயிா் செய்துள்ளனா். மீதமுள்ள இரண்டு பருவத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுமாம்.

சின்னசேலம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் வாய்க்காலை சீரமைத்து, அதில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்றினால் விவசாயிகள் பயனடைவாா்கள்.

இதுகுறித்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com