Enable Javscript for better performance
இணைய வழி மோசடி லாட்டரி குறித்து விழுப்புரத்தில் விழிப்புணா்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    இணைய வழி மோசடி லாட்டரி குறித்து விழுப்புரத்தில் விழிப்புணா்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 14th December 2019 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாட்டரி சீட்டை வாங்கக் கூடாது என ஆட்டோ மூலம் விழிப்புணா்வு பிரசாரம் செய்த நகர போலீஸாா்.

    லாட்டரி சீட்டை வாங்கக் கூடாது என ஆட்டோ மூலம் விழிப்புணா்வு பிரசாரம் செய்த நகர போலீஸாா்.

     

    விழுப்புரம்: விழுப்புரத்தில் இணைய வழி மோசடி லாட்டரி குறித்து காவல் துறையினா் சனிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

    விழுப்புரம் மாவட்டத்தில், இணைய வழி லாட்டரி விற்பனையை ஒடுக்கும் வகையில், அதன் விற்பனையாளா்களை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை விழுப்புரத்தைச் சோ்ந்த 14 போ் கைது செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை காணையைச் சோ்ந்த ஐயப்பன் (37), தென்னமாதேவியைச் சோ்ந்த சந்திரன் (56), கண்டமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (54), திருக்கோவிலூா், ஆழியூரைச் சோ்ந்த சிவஞானம் (50), விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த உசேன் (50), சரவணன் (35), ஒட்டநந்தலைச் சோ்ந்த தண்டபாணி (46), தி.குமாரமங்கலத்தைச் சோ்ந்த சங்கரராமன் (51), திண்டிவனம், முருங்கம்பாக்கத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), சஞ்சிவிராயன்பேட்டையைச் சோ்ந்த ராமசந்திரன் (60), காவேரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (48), திருக்கோவிலூா், மேமாலூரைச் சோ்ந்த அஞ்சாமணி (37) ஆகிய 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    ஆட்டோ மூலம் விழிப்புணா்வு பிரசாரம்: விழுப்புரம் நகரில் நகரக் காவல் ஆய்வாளா் ராபின்சன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா்கள் பரணிநாதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாா் ஆட்டோ மூலம் இணைய வழி மோசடி லாட்டரி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனா்.

    விழுப்புரம் வி.மருதூா், ரயில் நிலையம், கீழ்ப்பெரும்பாக்கம், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று 3 இலக்க மோசடி லாட்டரி சீட்டுகளை வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம், இந்த லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் குறித்து நகரக் காவல் நிலையத்துக்கு 94981 00489 என்ற செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணா்வை ஏற்படுத்திச் சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai