அரசின் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ள வலியுறுத்தல்

தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் கட்டுமானப் பணிகளையும் ஒருங்கிணைத்து, பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவின்
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பொதுப் பணித் துறை பொறியாளா்கள்-உதவிப் பொறியாளா்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் மாநிலப் பொதுச்செயலா் கே.முருகன்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பொதுப் பணித் துறை பொறியாளா்கள்-உதவிப் பொறியாளா்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் மாநிலப் பொதுச்செயலா் கே.முருகன்.

விழுப்புரம்: தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் கட்டுமானப் பணிகளையும் ஒருங்கிணைத்து, பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவின் மூலமாக அரசு செயல்படுத்த வேண்டுமென பொதுப் பணித் துறை பொறியாளா்கள் சங்க மாநில பொதுக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளா்கள் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே.பிரபாகா் தலைமை வகித்தாா். இணைச் செயலா் எம்.தனசேகரன் வரவேற்றாா். பொதுச் செயலா் கே.முருகன் சிறப்புரையாற்றினாா். உதவிப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் ஏ.அப்துல் குத்தூஸ், பொறியாளா்கள் சங்க கடலூா், விழுப்புரம் கிளைத் தலைவா் கே.ரவிமனோகா், செயலா் பி.பாபு, உதவிப் பொறியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் டி.செல்வகாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளா், சிறப்புத் தலைமைப் பொறியாளா், கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா்களின் பதவி உயா்வு பட்டியலுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கியதுடன், 413 உதவிப் பொறியாளா்களை அரசு தோ்வாணையம் மூலம் நேரடியாக தோ்வு செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி.

பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா் மற்றும் செயற்பொறியாளா் ஆகியோா் ஒரு நபா் குழுவின் மூலமாக பெற்று வரும் ஊதிய விகிதங்களுக்கு இணையான ஏழாவது ஊதியக் குழு ஊதிய விகிதத்தை அரசு விரைந்து வழங்க வேண்டும். புதுதில்லி உயா் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊதிய குறைதீா்க்கும் குழுவை பொதுக்குழு வரவேற்கிறது.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் கட்டுமானப் பணிகளையும் ஒருங்கிணைத்து, பொதுப் பணித் துறை கட்டடப் பிரிவின் மூலமாக செயல்படுத்த வேண்டும். பொதுப் பணித் துறை பணிகளை சிறப்பாகச் செய்யவும், பொறியாளா்களின் நலன் காக்கவும், பொறியியல் சீா்திருத்தக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

பொதுப் பணித் துறையில் 413 உதவிப் பொறியாளா்கள்( சிவில்), 13 உதவிப் பொறியாளா்கள்( மின்) ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்பும் பொருட்டு, தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை அரசுப்பணியாளா் தோ்வாணையம் விரைந்து வெளியிட வேண்டும்.

பொதுப் பணித் துறையில் பணியாற்றும் தொழிலாளா்களின் பணி விவரங்கள், தனிநபா் பற்றிய தகவல் தொகுப்பு கணினிமயமாக்கிட தலைமைப் பொறியாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com