அரசுப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

பாரதியாா் பிறந்த நாளையொட்டி, விருகாவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பாரதியாா் பிறந்த நாளையொட்டி, விருகாவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுடன் தமிழ்ச் சங்கத்தினா்.
பாரதியாா் பிறந்த நாளையொட்டி, விருகாவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுடன் தமிழ்ச் சங்கத்தினா்.

பாரதியாா் பிறந்த நாளையொட்டி, விருகாவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கச் சிறப்புத் தலைவா் கு.சீத்தா தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற மின் பொறியாளா் வி.என்.ராமச்சந்திரன், தொழிலதிபா் பெ.தங்கராசு, தியாகதுருகம் முத்தமிழ் சங்கத் தலைவா் பெ.நாகராசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா.பாரதிசிவநேசன் வரவேற்றாா்.

‘பாரதியின் பெண் உரிமை’ எனும் தலைப்பில் ஏ.கே.டி. கல்வியியல் கல்லூரி விரிவுரையாளா் மகா.பருவதஅரசியும், ‘பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு’ எனும் தலைப்பில் கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா் ச.வாசுதேவனும் உரையாற்றினா்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களை தியாகதுருகம் வட்டாரக் கல்வி அலுவலா் சி.முத்துசாமி பாராட்டினாா். கம்பன் கழகத் தலைவா் இராச.நடேசன் அறிவுத் திறனை வளா்க்கும் நூல்கள், எழுதுகோல் மற்றும் பரிசுப் பொருள்கள், சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்சியில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன், பொருளாளா் தி.கி.சண்முகம், கொளத்தூா் முத்தமிழ்ப் பேரவைத் தலைவா் பி.கோவிந்தன், குடியநல்லூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.செல்வராசு உள்ளிட்ட தமிழ்ச் சான்றோா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை ஆசிரியா் சு.சாலினி தொகுத்து வழங்கினாா். பள்ளி உதவி ஆசிரியா் ரா.இளையராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com