Enable Javscript for better performance
விழுப்புரம் மாவட்டத்தில் 26.65 லட்சம் வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் 26.65 லட்சம் வாக்காளர்கள் 

    By DIN  |   Published on : 01st February 2019 07:49 AM  |   அ+அ அ-   |    |  

    விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மொத்தமுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்தப் பணி கடந்த ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரையில் நடைபெற்றது. திருத்தப் பணிகள் முடிந்து, வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
    இந்தப் பட்டியலில்13 லட்சத்து 36 ஆயிரத்து 175 ஆண்களும், 13 லட்சத்து 29 ஆயிரத்து 373 பெண்களும், 380 பாலினத்தவரும் என மொத்தம் 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 பேர் இடம் பெற்றுள்ளனர். 
    உளுந்தூர்பேட்டையில் அதிகம்: மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிக வாக்காளர்களும்,  அடுத்தடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியிலும், சங்கராபுரம் தொகுதியிலும் அதிகம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மயிலம், வானூர் தொகுதிகளில் குறைந்தளவு வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கூறியதாவது: வாக்காளர் இறுதிப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். 
    வழக்கம்போல், வியாழக்கிழமை முதல் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், இடம் மாறுதல் போன்ற பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.
    வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் மக்கள் விண்ணப்பங்களை அளித்து பெயர் சேர்க்கலாம். தேர்தல் ஆணைய இணையத்திலும் (w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n)  விண்ணப்பிக்கலாம்.
    புதிய செல்லிடப்பேசி செயலி: தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் வசதிக்காக வாக்காளர் ஹெல்ப் லைன் ஆப் என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.  இதனை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
    வாக்காளர் அட்டை பெற...: வாக்காளர் அடையாள அட்டை தொலைந்திருந்தால்,  வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, இ - சேவை மையம் மூலம் நகல் புகைப்பட அட்டை பெறலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு விரைவில் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்.  புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தப் பணிகளுக்கு உதவும் வகையில், அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடி முகவர்களின் பட்டியலை பதிவு அலுவலருக்கு வழங்கி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா,  உதவி ஆட்சியர் சாருஸ்ரீ,  மெர்சி ரம்யா, ஸ்ரீகாந்த், வட்டாட்சியர் சையத் மெஹமூத், தேர்தல் வட்டாட்சியர் சீனுவாசன், நகராட்சி ஆணையர் லட்சுமி, அதிமுக நகரச் செயலர் ஜி.பாஸ்கரன்,  திமுக நகரச் செயலர் சக்கரை, காங்கிரஸ் நகரத் தலைவர் செல்வராஜ், தேமுதிக நகரச் செயலர் மணிகண்டன், பாஜக பொதுச் செயலர் சுகுமாரன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், பகுஜன் சமாஜ் கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp