அனந்தபுரத்தில் புதிய மின் மாற்றிகள்
By DIN | Published On : 02nd February 2019 07:43 AM | Last Updated : 02nd February 2019 07:43 AM | அ+அ அ- |

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தில் புதிய மின் மாற்றிகள் வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
செஞ்சி உள்கோட்டம், அனந்தபுரம் பிரிவுக்குள்பட்ட அனந்தபுரம் நகர்ப்புற பகுதியில் இந்திய அரசின் நகர்ப்புற ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய மின் மாற்றிகள் மேற்பார்வைப் பொறியாளர் விழுப்புரம் மின்பகிர்மான பொறியாளர் பி.காளிமுத்து அறிவுரையின்படி செயற்பொறியாளர் ச.அனந்தநாராயணன், உதவி செயற்பொறியாளர்
கே.சீனுவாசன் தலைமையில் இயக்கி வைக்கப்பட்டது. அனந்தபுரம் இளநிலை மின் பொறியாளர் கே.சங்கர் நன்றி கூறினார்.