ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 125-ஆவது பிறந்த நாள் விழா
By DIN | Published On : 02nd February 2019 07:40 AM | Last Updated : 02nd February 2019 07:40 AM | அ+அ அ- |

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 125-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இங்கு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராமசாமி ரெட்டியார் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்
குமார், திண்டிவனம் சார்-ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார் நலச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் விவேகானந்தன், விழுப்புரம் மாவட்ட நலச் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாவட்டச் செயலர் ஜெயபிரகாஷ், திண்டிவனம் வட்டச் செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.