முதியவர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

முதியவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

முதியவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
விழுப்புரம் அருகே வளவனூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்(75), விவசாயி. இவரது மனைவி ரோகிணி (70). இளஞ்செழியனுக்கும் அவரது தம்பி அய்யாவு குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. 
கடந்த 22.4.2013-இல் ஏற்பட்ட தகராறின்போது அய்யாவு மகன் பாபு (எ) திலகர்பாபு (35) (படம்), தனது பெரியப்பா இளஞ்செழியனையும், அவரது மனைவி ரோகிணியையும் கத்தியால் வெட்டினார். இதில், காயமடைந்த இருவரில் இளஞ்செழியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திலகர்பாபுவை வளவனூர் போலீஸார் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஜமுனா, குற்றஞ்சாட்டப்பட்ட திலகர் பாபுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 
ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com