சுடச்சுட

  

  திருக்கோவிலூரில் கட்டுமானம், உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.15) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  இது குறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் இதர நல வாரியங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்கும் வகையில்  சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை (பிப்.15) வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai