28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
By DIN | Published on : 13th February 2019 09:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் 28 பேரை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதன்படி, விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக காவல் ஆய்வாளர் ரேவதி, கடலூர் மாவட்டம், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் கல்பனா, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, விருத்தாசலம் காவல் நிலையத்துக்கும், கடலூர் மாவட்டம், வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இரு மாவட்டங்களிலும் மொத்தம் 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.