அசாம் தொழிலாளி வெட்டிக் கொலை
By DIN | Published On : 14th February 2019 10:08 AM | Last Updated : 14th February 2019 10:08 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அசாம் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் போமுராடான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஹரன் பிஸ்வாஸ் மகன் ஹீராம் பிஸ்வாஸ் (36) (படம்), பர்தார் சர்காக் மகன் திபின்சார்கார்(45). உறவினர்களான இவர்கள் இருவரும் கோட்டக்குப்பம் அருகேயுள்ள சின்னகோட்டக்குப்பம் பகுதியில், புதுவையைச் சேர்ந்த லட்சுமணசாமி என்பவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில், பராமரிப்பு, பாதுகாவல் பணியைச் செய்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மது அருந்தினர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. அதிகாலை வரை நீடித்த இந்த மோதலின்போது, ஹீராம் பிஸ்வாûஸ திபின்சார்கார் கத்தியால் வெட்டினார். இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸார், சடலத்தை புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, திபின்
சார்காரை கைது செய்தனர்.
புதன்கிழமை மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.