சுடச்சுட

  

  உளுந்தூர்பேட்டை பகுதியில் இறைச்சிக் கடைகள் வைப்பதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
  இதுகுறித்து,  திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலக 
  குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளர் சே.நஜீர் உள்ளிட்ட வியாபாரிகள் அளித்த மனுவின் விவரம்:
  உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில்,  10-க்கும் மேற்பட்டோர் இறைச்சிக் கடைகளை வைத்து,  நீண்ட காலமாக நடத்தி வருகிறோம். அந்த இடத்தில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.  இதனால், கடை வைப்பதற்கு நிலையான இடத்தைத் தேர்வு செய்து வழங்க வேண்டும். இதுகுறித்து,  பேரூராட்சி செயல் அலுவலரிடமும் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கையில்லை. உழவர்  
  சந்தைப் பகுதியில் அதிகளவில் காலியிடங்கள் உள்ளன. அதேபோல, அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் காலியிடம் உள்ளது. 
  இங்கு, எங்காவது ஓர் இடத்தில் இறைச்சிக் கடைகள் அமைக்க 
  இடம் ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai