முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
கள்ளக்குறிச்சியில் 750 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 28th February 2019 09:01 AM | Last Updated : 28th February 2019 09:01 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் 750 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி நகரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து கள்ளக்குறிச்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குளத்துமேட்டு சாலையில் உள்ள ஒரு கடையில் நடத்திய ஆய்வின்போது, கிடங்கில் 750 கிலோ எடை தேநீர் கப், தண்ணீர் டம்ளர், நெகிழிப் பை உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர்கள தனபால், பாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.