முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
தமுமுக கட்சி அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 28th February 2019 09:24 AM | Last Updated : 28th February 2019 09:24 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் தமுமுக கட்சியின் மாவட்ட அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.
விழுப்புரம் தக்காத் தெருவில் நடைபெற்ற கட்சியின் அலுவலக திறப்பு விழாவுக்கு கட்சியின் மாநிலச் செயலர் அப்துல்சமது தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன், செயலர் ஜான்பாஷா, பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரத் தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலர் அலிஅக்பர், தமுமுக நகரச் செயலர் ஜாகீர்உசேன், பொருளாளர் அஷ்ரப்அலி, துணைச் செயலர் நசீர்அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.