முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 28th February 2019 09:26 AM | Last Updated : 28th February 2019 09:26 AM | அ+அ அ- |

திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பொன்.பாக்கியநாதன் எழுதிய "ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது (படம்).
பள்ளியின் தாளாளர் பால்ராஜ்குமார் அடிகளார் தலைமை வகித்தார். விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, நூலை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேவை செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பள்ளித் தேர்வுகளில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பொன்.ஆரோக்கியராஜ் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.