முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பைக்கில் சென்றவர் லாரி மோதி காயம்
By DIN | Published On : 28th February 2019 09:30 AM | Last Updated : 28th February 2019 09:30 AM | அ+அ அ- |

திண்டிவனத்தில் பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் காயமடைந்தார்.
திருநாவலூரை அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(35). இவர் புதன்கிழமை தனது பைக்கில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றார். நகர எல்லையான ஜக்காம்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அய்யனார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திண்டிவனம் போலீஸார் விசாரிக்கின்றனர்.