சுடச்சுட

  

  உளுந்தூர்பேட்டை பகுதியில் 2 துணை மின் நிலையங்கள் திறப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர், சேந்தநாடு ஆகிய இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களை இரா.குமரகுரு எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
  உளுந்தூர்பேட்டை வட்டம், எறையூர், சேந்தநாடு துணை மின் நிலையங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் வந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் 30-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில், தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு முயற்சியின்பேரில் அந்த பகுதிகளில் கூடுதல் திறன்கொண்ட  33/11 கி.வோ. திறன்கொண்ட துணைமின் நிலையங்கள் 
  அண்மையில்  அமைக்கப்பட்டன.
  இந்த துணை மின் நிலையங்களை இரா.குமரகுரு எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரகுராமன், சர்தார், நடேசன், உதவி செயற்பொறியாளர்கள் மோகன், காமராஜ், ராஜசேகர், ராஜாராமன் உதவி மின்பொறியாளர்கள் கண்ணன், பாக்கியராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை 
  ஜி.மணிராஜ், திருநாவலூர் செண்பகவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ், நகர இளைஞரணி செயலாளர் சௌ.இராமலிங்கம் 
  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai