சுடச்சுட

  

  விழுப்புரம் அரசு மகளிர் கலை  கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  மாணவிகள், ஆசிரியர்கள் பாரம்பரிய ஆடையில் புதுப்
  பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
  விழாவில் ஆசிரியர்கள்,  மாணவிகள் கலந்து கொண்டு 
  பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
  கள்ளக்குறிச்சி: இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் தாளாளர் ஜி.எஸ்.குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கு.மோகனசுந்தர் வரவேற்றார். 
  கல்லூரியின் வளாகத்தில் மாணவிகள், பேராசிரியர்கள் பாரம்பரிய ஆடைஅணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர்.
  கல்லூரியின் செயலர் என்.கோவிந்தராஜு, பொருளாளர் அ.தமிழ்மணி மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் பி.ஜான்விக்டர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai