சுடச்சுட

  

  படிப்பதை அதிக முறை எழுதிப் பார்ப்பது குரூப்-1 தேர்வில் வெற்றி பெற உதவும்

  By DIN  |   Published on : 12th January 2019 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்வுக்குப் படிப்பதை அதிக முறை எழுதிப் பார்ப்பது குரூப்-1 போட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் என்று  திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணப்பிரியா அறிவுறுத்தினார்.
  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் செ.பாஸ்கரன் தலைமை வகித்தார். 
  திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது: 
   குரூப்-1 தேர்வில் வெற்றி பெறுவதற்கு முழு அர்ப்பணிப்புடன் பயில வேண்டும். இயல்பாகவே போராட்ட குணம் படைத்த நாம்,  இத்தேர்வில் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையுடன்,  அனைத்து தகவல்களையும்,  தேடிப்பிடித்து படித்து அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக,  6ஆம் வகுப்பு முதல்  பிளஸ் 2 வரை உள்ள புத்தகங்களை படித்தால் போதும் என்ற பிறரது அறிவுரையை மட்டும் வைத்து, பொதுவாக படிப்பது போதாது.
  தேர்வுக்கான பாடங்களை தெரிந்துகொண்டு, அதனை ஆழமாகப் படிக்க வேண்டும்.  6 முதல் பிளஸ் 2 வரை புத்தகங்களில்,  தேர்வுக்கான பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.  தேர்வுக்கான விதிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  
  முதல் நிலைத்தேர்வுக்கும் நன்கு எழுதிப் பழக வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம்,  நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
  தேர்வில் நிறைய எழுதினால்தான் தேர்ச்சி பெற முடியும். அதிக பக்கங்கள் எழுதியிருக்க வேண்டும். கருத்தும் தெளிவானதாக இருக்க வேண்டும். 
  தேர்வுக்கு ஏதேனும் ஒரு மொழியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுத வேண்டும். தங்களது வழக்கமான பணிகளுடன்,  தேர்வுக்காகவும் படித்து சாதிக்க வேண்டும் என்றார்.
  தொடர்ந்து,  கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள விழுப்புரத்தைச் சேர்ந்த  பாரதிதாசன்,  வேளாண் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிருத்திகா ஆகியோர் தேர்வுக்கான தன்னம்பிக்கை தகவல்களை வழங்கினர்.  
  குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள,  தேர்வர்கள் 100 பேர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai