சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகை: பாதுகாப்பை பலப்படுத்த காவல் துறையினருக்கு எஸ்.பி. அறிவுரை

  By DIN  |   Published on : 12th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையின்போது விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
  விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி புகழேந்தி, டி.எஸ்.பி.க்கள் சங்கர், திருமால், ராஜேந்திரன், ராமநாதன், மகேஷ், அஜய் தங்கம், வினோதினி, வீமராஜ், முத்துமாணிக்கம், நீதிராஜ், காவல் ஆய்வாளர்கள், உதவிக் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
  இந்தக் கூட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பெருங்குற்றங்கள் வெகுவாக குறைக்கப்பட்டன. விபத்துகளும் குறிப்பிடும் வகையில் குறைக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை குறைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவகையில், தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புகார்கள் மீது விரைவாக சி.எஸ்.ஐ.ஆர். வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காலதாமதமின்றி புலன் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொங்கல் பண்டிகையின்போது மாவட்டத்தில் எங்கும் குற்றங்கள், தகராறுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டிய அறிந்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai