சுடச்சுட

  

  பொங்கல் பரிசு: முதல்வருக்கு மகளிர் சுயஉதவிக் குழு நன்றி

  By DIN  |   Published on : 12th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசால் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
  விழுப்புரம் ரங்கசாமி லே-அவுட்,  நாராயணன் நகர் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் கீதா தலைமையில்,  மகளிர் சுயஉதவிக் குழுவினர்,  அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு,  புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். 
  தமிழக அரசு சார்பில் வழங்கிய அரிசி,  சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பை பயன்படுத்தி பொங்கல் வைத்து வழிபட்ட அவர்கள்,  தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட,  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.  
  மேலும்,  பொங்கல் வைத்து,  படையலிட்டு அதனை வாழை இலையில் வைத்து,  பிளாஸ்டிக் இல்லாத நிலையில்,  பொங்கல் விழாவை கொண்டாடவும் வலியுறுத்தினர்.  மகளிர் குழுவினர்,  பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
  ரிஷிவந்தியத்தில்...: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேங்கடசுப்ரமணியன், சொக்கநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவரிராஜ், நாராயணசாமி உள்ளிட்ட அலுவலர்கள், பொறியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள் உள்ளிட்ட பலர் 
  கலந்துகொண்டனர்.  இசை நாற்காலி, உறியடித்தல், நீர் நிரப்புதல், கரண்டியில் எலுமிச்சை வைத்து ஓடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai