சுடச்சுட

  

  விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 16, 21, 26 ஆகிய மூன்று தினங்களில் அனைத்து வகை மதுக் கடைகள்,  மதுபானக் கூடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு  டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படவேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
  இதன்படி, வருகிற 16.1.2019 
  (திருவள்ளுவர் தினம்),   21.1.2019 (வள்ளலார் நினைவு தினம்) 26.1.2019 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்களிலும்,   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள்,  அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
  இதனால்,  இந்த மூன்று நாள்களிலும் மதுக் கடைகள்,  மதுபானக் கூடங்கள் இயங்காது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai