சுடச்சுட

  


  சின்னசேலம் அருகே சாலையோரம் நின்றிருந்த முதியவர் கார் மோதியதில் உயிரிழந்தார். 
  சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சான் (65). இவர் சனிக்கிழமை காலை சின்னசேலம் செல்வதற்காக சேலம்-விருத்தாசலம் சாலையில் குரால் பிரிவு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
  அப்போது, சேலம் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற கார் முதியவர் மீது மோதியதாகத் தெரிகிறது. 
  இதில் பலத்த காயமடைந்த முதியவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
  இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai