சுடச்சுட

  


  திருவெண்ணெய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 4888 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 
  நிகழ்ச்சியில் பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
  நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் காண்டீபன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகவள்ளி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வங்கிச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். 
  ஒன்றிய இணைச் செயலாளர் சிவகாமி முருகதாஸ், நகரச் செயலாளர் கேசவன், நகரத் தலைவர் வேலாயுதம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாபு, செல்வமுருகன், துணைத் தலைவர் முருகன், இயக்குநர்கள் தங்க கலியபெருமாள், உஷா, கன்னியம்மாள், நகர எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சுந்தரம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் 
  கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai