சுடச்சுட

  


  அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிவபெருமான் பார்வதி திருக்கல்யாண காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சுந்தரர், சிவபெருமான் சுயம்வரா பார்வதி திருக்கல்யாண காட்சி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது. 
  அலங்கரிக்கப்பட்ட சிவன், பார்வதி திருமணத்துகான யாக பூஜை, பூர்ணாஹுதி செய்து கங்கணம் பூநூல் அணிவித்து மந்திரங்கள் ஓத மாங்கல்யதாரணம் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. 
  மாலை மாற்றுதல் நடைபெற்று சிறப்பு அர்ச்சனைகள் செய்து சிவபுராணம், கோளறு பதிகம், தேவார திருவாசக சிவபார்வதி துதிப்பாடல்கள் பாடி மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வ திருமண காட்சியை கண்டனர். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துர்கை அம்மனுக்கு ராகுகால பூஜையும், இரவு 7 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று பால் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வார வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai