சுடச்சுட

  


  விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை செஞ்சியில் நடைபெற்றது. 
  மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.எம்.மொக்தியார்அலி தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி, காதர்நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி எம்எல்ஏவுமான மஸ்தான் சிறப்புரையாற்றினார். 
  தீர்மானங்கள்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் முதல் கட்டமாக ஊராட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. மேலும், இரண்டாம் கட்டமாக நகரம் பேரூரில் உள்ள வார்டுகளில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது எனவும், ஊராட்சி சபை கூட்டங்களில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பளர்கள் கலந்து கொண்டு ஊராட்சி சபைகளின் நிகழ்ச்சிகளை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் செஞ்சி மணிவண்ணன் (செஞ்சி), அர்ச்சுனன் (மயிலம்), பாலாஜி (திண்டிவனம்), ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் செஞ்சி கிழக்கு நாகராஜ், மேற்கு ரங்கசாமி, மேல்மலையனூர் கிழக்கு வேணுகோபால், மேற்கு சதீஷ், வல்லம் கிழக்கு சுரேந்தர், மேற்கு பார்த்தீபன், மரக்காணம் மேற்கு ராஜேஷ், பேரூர் மணிகண்டன், செஞ்சி பிரபு, அனந்தபுரம் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai