திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், முத்தமிழ்ச் சங்கம், ஒளவையார் தமிழ்ச் சங்கம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், முத்தமிழ்ச் சங்கம், ஒளவையார் தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில், புதன்கிழமை தியாகதுருகம் பேரூராட்சி பூங்கா வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முத்தமிழ் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் பெ.நாகராசன் தலைமை வகித்தார். திரைப்பட இசையமைப்பாளர் மாசா, முத்தமிழ்ச் சங்க இணைச் செயலர் ரா.நெடுஞ்செழியன், ஒளவையார் தமிழ்ச் சங்கத் தலைவர் கல்யாணி நடராசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் ரா.துரைமுருகன் வரவேற்றார்.
உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை பொதுச் செயலர் புலவர் கு.சீத்தா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். ந.கவிப்பிரியா, ந.ஜீவப்பிரியா முற்றோதல் வாசித்தனர். ஆசிரியர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் வீரமுத்து, ச.செவ்வந்தி ஆகியோர் திருக்குறள் மேன்மை பற்றியும், அவசியத்தைப் பற்றியும் பேசினார்கள்.
உலகப் பொதுமறை நூலாக போற்றப்படும் திருக்குறளை இந்திய தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்களை நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் முத்தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் நா.ஹரீஸ் மௌலி நன்றி கூறினார்.
திருக்கோவிலூர் 
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்குறள் கழக அக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விளந்தை அ.சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழ.அருள்மொழி வரவேற்றார். விழாவில், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுப்பிரமணியன், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருட்தந்தை அருள்நாதன் தங்கராசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், தமிழ்நாடு அனைத்து நிலை ஆசிரியர் சங்கச் செயலர் சி.குருராசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருக்குறள் ராஜகோபால் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com