ஜன.26-ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 24th January 2019 09:38 AM | Last Updated : 24th January 2019 09:38 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (ஜன.26) குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராம சபை கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2018 வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவின விவரங்கள், கிராம வளர்ச்சிப் பணிகளுக்கான அறிக்கை (2019-20), குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், நெகிழிப் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதனால், இக்கிராம சபை கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.