திருக்குறள் பேரவை ஆண்டு விழா
By DIN | Published On : 28th January 2019 09:56 AM | Last Updated : 28th January 2019 09:56 AM | அ+அ அ- |

மணலூர்பேட்டையில் திருக்குறள் பேரவையின் மூன்றாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பேரவைத் தலைவர் அ.தங்கவேலு தலைமை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் பி.முனியன் முன்னிலை வகித்தார். பேரவை செயலர் தா.சம்பத் வரவேற்றார்.
விழாவில் நீதியரசர் ச.எழில்வேலவன், தொழிலதிபர் டி.கே.டி.முரளி, தனியார் கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ், நற்றமிழ்ப் பேச்சாளர் ஆ.இலட்சுமிபதி, முனைவர் க.நடராஜன் ஆகியோர் திருக்குறளின் சிறப்புகள் குறித்துப் பேசினர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ம.அயூப்கான், தனியார் பள்ளித் தாளாளர் தே.முருகன், தலைமை ஆசிரியர் கோ.ஏழுமலை, முதுநிலை ஆசிரியர் ச.முத்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு வங்கித் தலைவர் ப.ஏழுமலை ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் தா.சிவநேசன், ம.வெங்கடகிருஷ்ணன், ஆசிரியர்கள் ஜெயக்குமார், அரங்க.குணசேகரன், ம.ஆனந்தன், க.ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அ.திருமுருகன் நன்றி கூறினார்.