4,462 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
By DIN | Published On : 29th January 2019 09:22 AM | Last Updated : 29th January 2019 09:22 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள விளையாட்டுத் திடலில், அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.பி.பழனி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.
விழாவில் திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் த.விஜயலட்சுமி கலந்து கொண்டு, அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிப் பேசினார்.
திருக்கோவிலூர், ஜி.அரியூர், திருப்பாலப்பந்தல், அரகண்டநல்லூர், விளந்தை, வீரபாண்டி, வி.புத்தூர், ஆற்காடு, ஆலம்பாடி உள்பட 11 பள்ளிகளைச் சேர்ந்த 4,462 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சி.ஆர்.சம்பத், வழக்குரைஞர் கே.உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.