பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 29th January 2019 09:22 AM | Last Updated : 29th January 2019 09:22 AM | அ+அ அ- |

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மணம்பூண்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்தக் கழகத் தலைவர் தி.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் கி.மூர்த்தி, பொருளாளர் க.நடராஜன், முன்னாள் பொதுச் செயலர் எத்துராஜன், முன்னாள் பொருளாளர் கனகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தணிக்கையாளர் அப்பர்சுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் கபிலர் விழா நிகழ்ச்சி அமைப்பாளர் முனைவர் கிருங்கை கோ.சேதுபதி, பண்பாட்டுக் கழகம் சார்பில் நிகழாண்டு நடைபெறவிருக்கும் கபிலர் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர்கள் தேவ.ஆசைத்தம்பி, தே.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் சிங்கார.உதியன், தா.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.