சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சியில் ஹாலோபிளாக் கல் தலையில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
   கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், புடையூரைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் ராஜிவ்காந்தி (30), கூலித் தொழிலாளி.
   இவர் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள ஹாலோபிளாக் கல் அறுக்கும் பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
   ஞாயிற்றுக்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது, படுத்து தூங்கிக் கொண்டிருந்த இவரின் தலை மீது ஹாலோபிளாக்கல்கள் விழுந்தன. இதில் ராஜிவ்காந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai