மாதிரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உரிய விவரங்களை பொதுமக்கள் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உரிய விவரங்களை பொதுமக்கள் அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய அளவில் சமூக பொருளாதார அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான தேசிய மாதிரி கணக்கெடுப்பு நடத்தி, முதன்மையான தரவுகளான நுகர்வோர் செலவு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை, விவசாயம் போன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
 இதற்காக, குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலைமைகள், அவற்றின் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு நிலை குறித்து பல்வேறு வினாக்கள் களப்பணியாளர்களால் கேட்கப்படும். ஆகவே, களப்பணியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை பொதுமக்கள் அளிக்க வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com