குடிநீர் பிரச்னையைத் தீர்க்க இந்திய குடியரசுக் கட்சி வலியுறுத்தல்
By DIN | Published On : 12th July 2019 08:35 AM | Last Updated : 12th July 2019 08:35 AM | அ+அ அ- |

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி வலியுறுத்தியது.
விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் இந்திய குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நாகமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார்.
மாவட்டச் செயலர் பாலு, மாவட்ட இணைச் செயலர்கள் சேகர், அங்காளன், ஒன்றியத் தலைவர் ராஜாமணி, குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரத்தில் அமைக்கப்படும் அரசு சட்டக் கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.