சுடச்சுட

    

    ஊரக வேலை வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் தர்னா

    By DIN  |   Published on : 13th July 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
    சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை உரையாற்றினார்.
    போராட்டத்தின்போது, காணை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாணை 52-ன்படி, 4 மணி நேர வேலை, சட்டத்தின்படி தினசரி கூலி ரூ.229 வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ள நிலையில், பல ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கி உள்ளனர்.
    இதில், அகரம் சித்தாமூர், வாழபட்டு ஆகிய ஊராட்சிகளில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கவில்லை. இவர்களுக்கு வேலை வழங்க பதிவு செய்வதற்கு இணைய வழி பதிவில் பழுது உள்ளதாகக் கூறி, ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அரசாணை 52-ன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தினர்.
    அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், தர்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாற்றுத் திறனாளிக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால், மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai