சுடச்சுட

  

  செஞ்சி வட்டம், வடபுத்தூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  முகாமுக்கு செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுச் சிறப்புரையாற்றினார். 
  துயர் துடைப்பு வட்டாட்சியர் நெகருன்னிசா, மண்டல துணை வட்டாட்சியர் செல்வமூர்த்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன. இந்த
  மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணுமாறு வட்டாட்சியர் கோவிந்தராஜ் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, சுகாதாரத் துறை ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சிரஞ்சீவி,  தீயணைப்பு நிலைய அலுவலர் பசுபதி மற்றும் ஊராட்சிச் செயலர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai