சுடச்சுட

  


  செஞ்சியை அடுத்த ஸ்ரீரங்கபூபதி கல்விக் குழுமத்தில் உள்ள ஸ்ரீரங்கபூபதி மருந்தியல் (பார்மசி) கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ் முன்னிலை வகித்தார்.
  அப்பல்லோ பார்மசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை 
  பணிக்குத் தேர்வு செய்தனர். இதில், 220 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  நீயுட்டன் ராமலிங்கம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், பணிக்குத் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai