சுடச்சுட

  


  விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.11.31 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்று வழங்கப்பட்டது.
  விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், விழுப்புரம் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்
  குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான 
  எஸ்.ஆனந்தி முகாமை தொடக்கிவைத்து பேசியதாவது:
  மக்கள் நீதிமன்றம் மூலமாக நீண்டகால வழக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படுகிறது.
  மக்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு வழக்கை தொடுத்தவர்களும், வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
  முன்னதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் நீதிபதி சி.சங்கர் வரவேற்றார். நீதிபதிகள் என்.அருணாச்சலம், எஸ்.முத்துக்குமரவேல், 
  என்.ராமகிருஷ்ணன், மோகன், தண்டபாணி, அருண்குமார், செங்கமலசெல்வன், கோபிநாதன், உத்தமராஜ், கவிதா, வெங்கடேசப்பெருமாள், ஆயுஷ்பேகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் ராஜாராம், ரத்தினசபாபதி, சந்திரமவுலி, இளங்கோவன், உலகநாதன் உள்ளிட்டோரும், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.
  முகாமில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகள் என 9,018 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், 2,349 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல, வங்கி வாராக் கடன் தொடர்பான 3,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 201 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.11.31 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டு, உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai