குடிநீர் கிணற்றை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

மயிலம் அருகே குடிநீருக்கு ஆதாரமான ஏரியில் சிதைந்துள்ள கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று, அதை சனிக்கிழமை நேரில் பார்வையிட்


மயிலம் அருகே குடிநீருக்கு ஆதாரமான ஏரியில் சிதைந்துள்ள கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று, அதை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மாசிலாமணி, அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மயிலம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பொதுப்
பணித் துறை ஏரியில் அமைந்துள்ள பழைமையான கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியில் 6 கிணறுகள் உள்ள நிலையில், அவற்றில் 5 கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு கிணற்றில் நீர் இருந்தும், அதன் சுற்றுச்சுவர் இடிந்து உள்ளே விழுந்து கிடக்கிறது.
இதனால், அந்தக் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தக் கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மயிலம் தொகுதி எம்எல்ஏ மாசிலாமணியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர் ஏரிக்குச் சென்று அங்கு சுற்றுச்சுவர் இடிந்துள்ள கிணற்றை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
கிணற்றின் நிலை குறித்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்ட அவர், பட்டணம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியில் புதிதாக கிணறு அமைத்தாலும் தண்ணீர் வருவது சந்தேகம் என்பதால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ள கிணற்றை சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் எம்எல்ஏவிடம் உறுதியளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com