திருக்கோவிலூரில் கபிலர் விழா ஜூலை 19-இல் தொடக்கம்

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில், 44-ஆம் ஆண்டு கபிலர் விழா திருக்கோவிலூரில் வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது.


திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில், 44-ஆம் ஆண்டு கபிலர் விழா திருக்கோவிலூரில் வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் ஆசியுரையாற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் தி.இராசகோபாலன் தலைமையில், வாழ்விக்க வந்தவர்கள்' (அண்ணல் காந்தியடிகள் 150) என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி தொடக்கிவைத்துப் பேசுகிறார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜூலை 20-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடும், முற்பகல் 11.30 மணிக்கு புதுச்சேரி கவிஞர் இரா.மீனாட்சி தலைமையில், மரங்களைப் பாடுவோம்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு ஜீவ.சீனுவாசன் குழுவினரின் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தம்பியரால் பெருமை பெற்றோருள் தலைசிறந்தவன்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பேராசிரியர் சிவகாசி மு.இராமச்சந்திரன் நடுவராகப் பங்கேற்கிறார்.
21-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடும், தொடர்ந்து, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் உவமைகள் உணர்த்தும் உண்மைகள்' என்ற தலைப்பில் சங்கப் பலகை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் தொடக்கிவைத்துப் பேசுகிறார்.
மாலை 5 மணிக்கு, கபிலர் குன்றின் அருகிலுள்ள ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து அறிஞர் உலா' ஊர்வலம் தொடங்குகிறது. இதை முன்னாள் எம்.பி. ஆதி.சங்கர் தொடக்கிவைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் முன்னிரவு பரிசு நிலா' நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
பாராட்டு நிலா' நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் வீரபாண்டி சீ.ஹரிசிங், மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி ஆகியோர் பாராட்டப்படுகின்றனர்.
இரவு 7 மணிக்கு நடைபெறும் விருது நிலா' நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்து, தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமனுக்கு கபிலர் விருதும், ரூ.ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கிப் பேருரையாற்றுகிறார். தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதாளரைப் பாராட்டிப் பேசுகிறார்.
விழா ஏற்பாடுகளை திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் சீநி.தியாகராஜன், செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன்,  ஒருங்கிணைப்பாளர் கிருங்கை சேதுபதி தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com