Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் சுகாதார வளாகம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி அருகேயுள்ள ஈமண்டகப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் (கழிப்பறை) அண்மையில் திறந்து வைக்கப்பட்டது .
    சென்னையில் இயங்கி வரும் மகளிர் மேம்பாட்டு நிறுவனமான "குரோயிங் சூப்பர்சூனிட்டி' என்ற நிதி நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தின் திறப்பு விழாவுக்கு விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தேவகி வரவேற்றார். 
    நிதி நிறுவனத்தின் மனித வள மேலாளர் கிறிஸ்மஸ் அப்ரோஷன், சாமுவேல், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் சுகாதார வளாகச் சாவியை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.  இதில் விழுப்புரம் 
    மண்டல மேலாளர் ராஜா, மாவட்ட கிளை மேலாளர் மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai