Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் வாசிப்பு இயக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அரசு அங்கவை சங்கவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நூலகத் துறை சார்பில், வாசிப்பு இயக்க விழா அண்மையில் நடைபெற்றது.
    விழுப்புரம் மாவட்ட நூலகத் துறை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, வாசிப்பின் பயன் குறிந்த நிகழ்ச்சியை  திருக்கோவலூர் அங்கவை சங்கவை அரசு 
    மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.  
    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.சாந்தி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் கே.பாஸ்கரன் வரவேற்றார். வாசகர் வட்டக் குழுத் தலைவர் சிங்கார உதியன் தொடக்க உரையாற்றினார். 
    மாவட்ட நூலகர் இரா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  வாசிப்பின் பயன்கள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில், ராமானந்த குருஜியின் சீடர் பிரகதீஸ்வர் 250 மாணவர்களுக்கும், பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாண்குமார் 150 மாணவர்களுக்கும், உதவித் தலைமை ஆசிரியர் ந.காமராஜ் 50 மாணவர்களுக்கும், தற்காப்புக் கலை ஆசிரியர் என்.கே.முருகன் 50 மாணவர்களுக்கும், ஆசிரியை ஜெ.விமலா 50 மாணவர்களுக்கும், நூலக உறுப்பினர் தொகையை வழங்கினர்.
    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரகோத்தமன் ரூ. ஆயிரம் செலுத்தி, புரவலராக இணைந்தார். கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்.முருகன், ஆசிரியர்கள் சா.சித்ரா, டி.தமிழ்ச்செல்வி, ர.புவனேஷ்வரி, மா.அல்லி மற்றும் நூலகர் மு.சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் மு.அன்பழகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai