Enable Javscript for better performance
ஆரோவில் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆரோவில் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி

    By DIN  |   Published on : 25th July 2019 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே புதன்கிழமை மாட்டின் மீது மோதியதால் இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த இரு இளைஞர்கள், பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
    விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் அருண் (20), தச்சுத் தொழில் செய்து வந்தார். முருகேசன் மகன் கார்த்திக் (20), கூலித் தொழிலாளி. மனோகரன் மகன் அய்யனார் (21).
    நண்பர்களான இவர்கள் 3 பேரும் புதன்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் காலாபட்டிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பிள்ளைச்சாவடி பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த மாடு மீது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், இரு சக்கர வாகனத்திலிருந்து அருண், கார்த்திக், அய்யனார் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
    அப்போது, பின்னால் புதுச்சேரி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரம் அவர்கள் மூவர் மீதும் ஏறியது. இதில், அருண், கார்த்திக் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் கால் முறிந்தது. ஆரோவில் போலீஸார் அய்யனாரை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலங்களை உடல் கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai